மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் படமான ‘த லயன் கிங்’ வரும் ஜூலை 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலர் பின்னணி குரல் கொடுத்திருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இந்தியில் ஷாருக் கான், அஷிஷ் வித்யார்த்தி, அர்யன் கான், அஸ்ரனி, ஸ்ரேயாஸ் தல்பேட், சஞ்சய் மிஷ்ரா, நேஹா கார்கவா, சன்னிதி சவுகான், அர்மான் மாலிக் ஆகிய பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ் பதிப்புக்கு நடிகர்கள் சித்தார்த், அரவிந்த்சாமி, ரவிஷங்கர், மனோபாலா, சிங்கம் புலி, ரோபோ ஷங்கர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
தெலுங்கு பதிப்பிற்கு நடிகர்கள் நானி, ஜகபதிபாபு, ரவிஷங்கர், ஆலி, பிரம்மானந்தம், லிப்ஷிகா ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி பிராந்திய மொழி சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் குரல் கொடுத்திருப்பதால் ‘த லயன் கிங்’ இந்திய ரசிகர்க்ளின் எதிர்ப்பார்ப்பை அதிகமாகவே தூண்டியிருக்கிறது.