நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வந்த டியர் காம்ரேட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் கரண் ஜோகர் வாங்கியுள்ளார் என செய்திகள் வந்தது. அதற்காக அவர் 6 கோடி ருபாய் கொடுத்தார் என செய்திகள் வந்தது.
இந்நிலையில் கரண் ஜோகர் விஜய் தேவரகொண்டாவை ஹிந்தியில் அறிமுகப்படுத்துவதாக கேட்டுள்ளார். டியர் காம்ரேட் பட ஹிந்தி ரீமேக்கில் அவரை நடிக்கவைக்க அவர் திட்டமிட்டாராம். ஆனால் விஜய் அதை மறுத்துள்ளார். புதிய கதை என்றால் நடிப்பதாக கூறு வாய்ப்பை நிராகரித்துள்ளார் அவர்.
சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் தான் எப்போதும் ரீமேக் படங்களில் நடிக்கமாட்டேன் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.