கமலின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன்-2 படம் தயாராக உள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷங்கர் தற்போது வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு பேச்சுக்கள் எழுந்தன. மேலும் இவர் கமலின் பேரனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இப்படத்தில் அந்த பேரன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க தான் அதிக வாய்ப்புள்ளதாம். ஆனால் இன்னும் இது உறுதி செய்யப்படவில்லை.