தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஐடி கார்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல் என்ற பெயரும், தலைமை பயிற்சியாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
#Bigil Movie Football #ThalapathyVijay ID Card
Name : Michael.C
Team : TamilNadu
ID : 1541FL2019Head Coach of #ThalapathyVijay ??
Football Game me Thatturom ✊
Goal le Adichu Thukurom ?#Bigil #Micheal Game Start Now#BigilPoduForThalapathyVijayism pic.twitter.com/QIQ0WFlv7I
— Madhan Vijay (@MadhanV45040346) June 28, 2019
மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை அடுத்து டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.