ஹிந்தியில் URI என்ற பெயரில் படம் ஒன்று கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தை இணையத்திலிருந்து டோரன்ட் மூலமாக ஒருவர் திருட்டு பிரிண்ட்டை பதிவிறக்கியுள்ளார்.
3.8GB அளவிலான இந்த படம் தொடங்கியதுமே படத்தின் நட்சத்திரங்கள் விக்கி கௌசல் மற்றும் யாமி கௌதம் இருவரும் கேமிரா முன் வந்து திருட்டுத்தனமாக பதிவிறக்கியவரை பயங்கரமாக கலாய்த்துள்ளனர். இது 2 நிமிடங்கள் ஓட அடுத்த 2 மணிநேரத்திற்கு இப்படத்தின் டிரைலர் மீண்டும் மீண்டும் ஓடியுள்ளது.
இதை பார்த்து ஷாக்கான பதிவிறக்கியவர், பிறகு தான் இது URI படக்குழுவினரால் திருட்டு தனமாக இணையத்தில் பட பார்ப்போரை prank செய்வதற்காக எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்தது.