கடந்த வருடத்தின் தொடக்கத்தில் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் ‘ட்விட்டர்’ பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுசித்ரா தன்னுடைய “ட்விட்டர்’ பக்கத்தை விஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்று இதுகுறித்து விளக்கம் அளித்தார். ‘சைபர் க்ரைம்’ போலீசில் பரபரப்பு புகாரையும் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த ஆபாச பட சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அனுயா பக்வத். சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்த இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இவர் முதன் முதலில் அறிமுகம் ஆனது “Mahek” என்ற ஹிந்தி படத்தில் தான்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்து கொண்டு வரும் இவர் இப்போது மீண்டும் ஹிந்தி பக்கம் சென்றுள்ளார். அங்கே, Kasturi Kundal basei என்ற நாவலை அடிப்படையாக கொண்ட ஒரு நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்
.