நடிகர் கருணாகரணை பலருக்கும் தெரிந்திருக்கும். சூது கவ்வும், ஜிகர்தண்டா, பீட்ஸா என பல படங்களில் நடித்தவர். இன்னும் படங்களில் அவர் நடித்து வருவதை காணமுடிகிறது.
அண்மையில் வெளிவந்த பொது நலன் கருதி படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் ரூ 25 லட்சம் முன்பணம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் விழாவிற்கு எவ்வளவோ கூப்பிட்டும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் கருணாகரனிடம் தயாரிப்பாளர் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால் அவரோ இணை தயாரிப்பாளரை ஆபாசமாக போனில் திட்டியுள்ளார். மேலும் படக்குழுவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.