நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி 12 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் ஈர்த்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து வெளியிட்டுக்க தயாராகி வருகின்றது.
ஜூலை வெளியாகவிருந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகிவரும் அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்பட மொழியாக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் இதில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இப்படத்தினை தமிழில் வெளியிட விரும்பிய இந்நிறுவனம் இயக்குநர் பாலா தலைமையில் செயல்மடும் B Studios நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தின் படி இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க தமிழில் வர்மா என்னும் பெயரில் உருவானது.
வெளியீடு வரை இத்திரைப்படம் வந்த நிலையில் தெலுங்கு பதிப்பில் இருந்து தமிழ் பதிப்பு வேறுபட்டிருப்பதாக கூறி ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனத்தார் தெரிவித்தனர். விரைவில் புது குழுவுடன் மீண்டும் இத்திரைப்படம் இயக்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
‘வர்மா தமிழ் பதிப்பு புதிய பெயரில் ‘ஆதித்யா வர்மா’ எனும் தலைப்புடன் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரிகின்றனர்.
‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் துருவிற்கு ஜோடியாக ஹிந்தியில் வருண் தவான் நடித்த ‘அக்டோபர்’ படத்தில் கதாநாயகி பனிதா சந்து நடித்துள்ளார். அத்துடன் நடிகை பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.