தமிழ் சினிமாவில் கெளதம் கார்த்திக், வைபவி சண்டிலா, யாஷிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளியாகி இருந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்களின் கூட்டத்தால் படம் ஏகபோக வசூல் வேட்டை நடத்தியது.
இந்த படத்தில் நடித்திருந்த யாஷிகா ஒவ்வொரு பேட்டியின் போதும் ஏதாவது கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அப்படி தான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.
ஆண்கள் கண்டபடி வாழ்வது போல பெண்களும் வாழலாம், அவர்களுக்கு ஒரு சட்டம் நமக்கு ஒரு சட்டமில்லை எனவும் கூறியுள்ளார்.