ஆபாசம் என்பது வெறும் ஆடையில் இல்லை. அது பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் ஒரு பெண்ணியவாதி இல்லை எனவும், பெண்ணியம் என்ற வார்த்தை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேயாத மான் திரைப்படத்தின் இயக்குனரான ரத்னகுமார் இயக்கிய ஆடை திரைப்படம் பல எதிர்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ஒரு பிரச்சினையை பெண்ணியம் என்ற கண்ணோட்டத்தில் அணுகாமல், மனிதத்துவத்துடன் அணுக வேண்டும். நான் ஒரு பெண்ணியவாதி என்பதை விட சிறந்த மனிதர் என்பதையே விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.