நடிகர் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் கட்சி துவங்கி நடத்தி வருகிறார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்துவந்த கமல் அரசியலில் கூட்டணி குறித்து நாளை அறிவிப்பை வெளியிடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தான் கமல் இணையவுள்ளார். அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை நடக்கவுள்ள திமுக பொது கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை கலைஞர் கருணாநிதி சிலையை காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி திறந்துவைக்கவுள்ளார். அதன்பின் YMCAவில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கமல் கலந்துகொள்ளவுள்ளார்.