சமந்தா தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின். இவர் எப்போதும் முன்னணி நடிகர்கள் படத்தில் தான் நடிப்பார்.
இப்போது கூட சிவகார்த்திகேயன் ஜோடியாக சீமராஜா படத்தில் நடித்துள்ளார், இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இவர் நாக சைதன்யாவை திருமணம் செய்தது அனைவருக்கும் தெரியும்.
இவர் ஒரு கொரியன் படம் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம், இப்படத்தில் சமந்தா 70-80 வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிகின்றது