இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் நிறுவன அதிபர் மகன் ஆனந்த் பிரமோலை திருமணம் செய்துகொண்டார்.
நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர், இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு முன்னர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் டேட்டிங் செல்ல இஷா அம்பானி விரும்பியுள்ளாராம்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது இஷாவுக்கு அதிக க்ரஷ் (Crush) இருந்துள்ளது. தொலைக்காட்சியில் அளித்த பேட்டியின் போது, ரன்வீர் சிங்குடன் டேட்டிங் செல்ல விருப்பமிருந்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ரன்வீர் சிங், சமீபத்தில் தான் நடிகை தீபிகா படுகோனேவை இத்தாலியில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.