அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திரைப்படம் குறித்த முழு விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘Mother Therasa The Saint’ என்ற தலைப்பில், இத்திரைப்படம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. நோபல் பரிசு பெற்ற அன்னை தெரேசாவின் திரைப்படத்தை சீமா உபத்யாய் என்பவர் இயக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தில் ஹொலிவுட் மற்றும் பொலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதேபோன்று ஹொலிவுட், பொலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் இத்திரைப்படத்தில் பணியாற்றவுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பொலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.