விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் ரம்யா தனது கணவரிடம் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து கோரினார்.
விஜய் தொலைக்காட்சி மூலம் வெகுஜன மக்களிடையே பரிட்சையமானவர் VJ ரம்யா. தொலைக்காட்சியில் உச்சம் கண்ட ரம்யா மணிரத்தனத்தின் படைப்பான ஒகே கண்மணி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற ஆசைக்கனவில் நினைத்து தொலைக்காட்சி பக்கம் இருந்து விலகியே இருந்தார் ரம்யா. ஆனால், சினிமாவில் வாய்ப்புகள் வருவதாக தெரியவில்லை. VJ ரம்யா என்றே அழைத்து பழகப்பட்ட இவரை நடிகை ரம்யா என அழைக்க யாரும் முன்வரவில்லை. இதனால் பண நெருக்கடி எனும் பரிதாப நிலைக்கு இருந்த தள்ளப்பட்டார். இதனால், திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், மீண்டும் பிரபல தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக ஐக்கியமாக்கியுள்ளார் ரம்யா.
தெரிஞ்ச வேலையை விட்டவனும் கெட்டான், தெரியாத வேலையை தொட்டவனும் கெட்டான் என்று சும்மாவா சொல்லி வச்சி இருக்காங்க..!