மும்பை: என்னை பார்த்து மட்டும் ஏன் அந்த கேள்வியே கேட்கிறார்கள் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் எரிச்சல் அடைந்துள்ளார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்த முதல் படமான தடக் இன்று வெளியாகியுள்ளது. சாய்ரத் மராத்தி படத்தின் இந்தி ரீமேக் தான் தடக். சாய்ரத் போன்று தடக் இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
ஜான்வியை விட இஷான் கட்டாரின் நடிப்பு சிறப்பாக உள்ளதாக படத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜான்வி
சாரா
நடிகர் சயிப் அலி கானின் மகள் சாராவுடன் ஜான்வியை அவ்வப்போது ஒப்பிட்டு பேசுகிறார்கள். சாராவின் முதல் படம் ரிலீஸாவதற்குள் அவருக்கு ரன்வீர் சிங்குடன் சேர்ந்து சிம்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜான்விக்கு கிடைக்க வேண்டிய சிம்பா பட வாய்ப்பு சாராவுக்கு சென்றது. சிம்பா படத்தை மசாலா மன்னன் ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார்.
இஷான்
ஒப்பீடு
நானும், இஷானும் எங்கு சென்றாலும் என்னிடம் மட்டும் சாரா பற்றி கேட்கிறார்கள். இந்த ஆண்டு நிறைய புதுமுகங்கள் வருகிறார்களே என்கிறார்கள். புது முகங்கள் வருவது நல்லது தானே. என் தோழி சாராவுடன் என்னை ஒப்பிடுவது சரி அல்ல. எனக்கும், சாராவுக்கும் இடையே போட்டி எல்லாம் இல்லை. அவரவர் வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.
நடிகர்
நடிகைகள்
நடிகர்களை பார்த்து நீங்கள் அந்த நடிகரை போட்டியாக நினைக்கிறீர்களா என்று யாரும் கேட்பது இல்லை. நடிகைகளிடம் மட்டும் ஏன் கேட்கிறார்கள். நாங்கள் சக நடிகைகளை போட்டியாக நினைக்காமல் இருக்க முடியாதா?. என்னிடம் கேட்கும் கேள்வியை இஷானை பார்த்து யாரும் கேட்பது இல்லை.
தோழி
நல்லவர்
புது முகங்கள் நிறைய பேர் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு சாராவை நன்கு தெரியும். அவர் அழகானவர், திறமையானவர். அவர் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். அவர் நிச்சயம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். சாராவின் கெரியர் பிக்கப் ஆகியுள்ளதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேனே தவிர அவரை பார்த்து பொறாமைப்படவில்லை என்றார் ஜான்வி.