தற்போது திரையுலகை பொறுத்த வரையில் வணிக ரீதியிலான படங்கள் அதிகளவு திரையிடப்படும் மத்தியில்., சில கருத்துள்ள திரில்லர் திரைப்படங்கள் அந்தந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பையும் பெரும் சில படங்கள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டு நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
அந்த வகையில்., கடந்த சில மாதத்திற்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் ராட்சசன். தமிழகம் முழுவதும் வெளிவந்த திரைப்படம் வித்தியாசமான கதையம்சத்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று., வணிக ரீதியிலும் நல்ல வசூலை செய்தது.
மேலும்., இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவின் (IMDB) சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இரண்டாவது வருடத்தின் சிறந்த திரைப்படமாகவும்., தென்னிந்திய திரைப்படங்களில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதன் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு மீண்டும் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.