நடிகர் சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் மூடர்கூடம் நவீன் தயாரிப்பில் ‘கொளஞ்சி’ திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோடுகின்றது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ‘என்னத்த சொல்ல’ பாடல் காணொளி வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.
இந்த பாடலை சத்ய பிரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் பாடியுள்ளனர்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் தனராம் சரவணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நாசத் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
கொளஞ்சி என்ற 13வயது சிறுவனை சுற்றி நடந்த உண்மை கதையை தழுவலாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நடராஜன் சங்கரன் இசையமைத்த இந்த படத்தில் விஜயன் முனுசாமி ஒளிப்பதிவில் அத்தியப்பன் சிவா படத்தொகுப்பில் உருவாகியது.