தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கிவந்த ஸ்ருதிஹாசன் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்தால் நிச்சயமாக அந்த படம் தேறாது..! என்ற பேச்சு பலமாக ஒலிக்க ஆரம்பித்ததால் புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லமால் முடங்கினார்.
இறுதியாக, தனது தந்தை நடித்து, தயாரிக்கவிருந்த சபாஷ் நாயுடு திரைப்படத்தில் நடிக்கவிருந்தார் அம்மணி. ஆனால், கமல்ஹாசன் இந்த படத்தை ட்ராப் செய்துவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார். இதனால், தற்போது ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார் ஸ்ருதி. இந்நிலையில், துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜமால் ஹீரோவாக நடிக்கும் ஹிந்தி படமொன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இதற்காக, மும்பைக்கும், சென்னைக்கும் அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறார்.
தற்போது, நடிகர் ஜான் ஆப்ரஹாமுக்கு ஜோடியாக ராக்கி ஹேண்ட்சம் என்ற படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ரேணுமா என்ற வீடியோ பாடல் இது வரை ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது ஸ்ருதிஹாசன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தான் அதிக ஹிட்ஸ் அடித்த ஸ்ருதிஹாசனின் பாலிவுட் பட வீடியோ என்பது குறிப்பிட தக்கது.