பிக்பொஸ் வீட்டில் லொஸ்லியாவும், கவினும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் தனியாக இருந்த கவினுடன், பேச ஆரம்பிக்கிறார் லொஸ்லியா.
இதன்போது கவின் “என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்” எனக் கூறுகிறார். இதனையடுத்து லொஸ்லியா பேசக்கூடாது என கூறுகிறீர்களா என கேள்வி கேட்டு கண்ணீர்விடுகிறார்.
இதனையடுத்து லொஸ்லியாவின் கண்ணீரை துடைத்துவிட்ட கவின், “நீ நினைக்கும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை” என கூறி சமாதானப்படுத்துகிறார். இவ்வாறாக நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீபிரியா, தனது ருவிற்றர் பக்கத்தில் “லொஸ்லியா உங்களுக்கு கவினை சில மாதங்களுக்கு முன்புதான் தெரியும். அதனால் இவ்வளவு உணர்ச்சிவசப்பட தேவையில்லை ”எனத் தெரிவித்துள்ளார்.
இதனையே ஒரு சில வாரங்களுக்கு முன் கமல்ஹாசனும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.