மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் மடோனா சபஸ்ட்டீன். தொடர்ந்து, பல்வேறு தமிழ் படங்களில் நடித்தாலும் தற்போது அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.
அது ஏன் என அவர் பேட்டியில் பதிலளித்துள்ளார். என்னை தேடி முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், முத்தகாட்சியில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அட்ஜஸ்ட் செய்து கொண்டு முத்தக்காட்சியில் நடிக்க சொன்னார்கள் ஆனால், நான் சம்மதிக்கவில்லை. அதனால் தான் என்னை கமிட் செய்ய மறுக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
“லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை” என மடோனா பேட்டியில் கூறியுள்ளார். மடோனா இப்படி கூறினாலும், படப்பிடிப்பு தளத்தில் அவரது காதலன் கொடுக்கும் கெடுபிடிகள் தான் அம்மணியின் வாய்ப்பு பறிபோனதற்கு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.