நடிகர் ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படம் வெளியாகி உள்ளது… ஜெயம் ரவி டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் அடங்க மறு… இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராசி கண்ணா நடித்துள்ளார்… இவர் ஏற்கனவே தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது… ஜெயம் ரவி காவல் அதிகாரியாக இப்படத்தில் வருகிறார்… அவரிடம் ஒரு வழக்கு வருகிறது அதனை எதிர்கொள்ளும் போது பல சிக்கல்களை சந்திக்க பல கஷ்டங்களையும் சந்திக்கிறார் ஜெயம் ரவி… இதில் இருந்து அவர் எப்படி அந்த வழக்கை முடித்தார் தன்னுடைய காவல் துறையில் உள்ள தவறான அதிகாரிகளை கண்டுபிடித்து அவர்களை அழித்தாரா என்பது இந்த திரைப்படத்தின் கதை…
இந்த திரைப்படத்தில் ஆணிவேராக பார்க்கப்படுவது ஜெயம் ரவியின் நடிப்பு… தனி ஒருவனுக்கு பிறகு மிடுக்கான கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி… மேலும் நடிகை ராசி கண்ணா ஒரு சில இடங்களில் வந்தாலும் அவரின் நடிப்பும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது… இருப்பினும் பார்த்து பார்த்து பழகிப் போன போலீஸ் கதையாகவே இந்த கதை இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் நம்மளை சலிப்பு ஏற்பட வைக்கவில்லை இதனாலேயே இந்த திரைப்படம் இறுதி வரை பரபரப்பாக செல்கிறது… மொத்தத்தில் இந்த திரைப்படத்திற்கு நம் சேனல் தரக்கூடிய மதிப்பெண் 3.6/5