தமிழில் அங்காடித்தெரு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அஞ்சலி. தொடர்ந்து நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார்.
பிறகு, தன்னடைய குடும்ப சண்டை காரணமாக சில காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டார். பிறகு, தெலுங்கு, மலையாளம் என தனது நடிப்பு வட்டத்தை விரிவடைய செய்தார். இவர் நடிப்பில் உருவான “ரோசாப்பூ” என்ற மலையாள படத்தின் ட்ரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
ஆம், கடந்த 2016-ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் இப்போது தான் ரிலீசுக்கு தயாராகிவ வருகின்றது . இந்த படத்தில் நடிகை அஞ்சலி விலைமாதுவாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது.