அஜீத் நடித்துள்ள படம் முதன்முறையாக ரஷ்யாவில் ரிலீஸ் ஆகிறது.
அஜீத்குமார், நயன்தாரா, சத்யராஜ், ஜெகபதிபாபு, பிரபு, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்துள்ள படம், ’விஸ்வாசம்’. டி.இமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவா இயக்கியுள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதன்முறையாக அஜீத் படம் ரஷ்யாவில் வெளியாகிறது. அங்கு, ரஜினியின் ’கபாலி’, ’2.0’, விஜய்யின் ’சர்கார்’ படங்கள் ஏற்க னவே ரிலீஸ் ஆகியுள்ளன. இந்நிலையில் ’2.0’ படத்தை ரஷ்யாவில் வெளியிட்ட பிரசாந்த், ’விஸ்வாசம்’ படத்தை ரஷ்யாவிலும் உக்ரைனிலு ம் வெளியிடுகிறார்.