தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவருக்கு என்று தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படம் தமிழில் தோல்வியை சந்தித்தாலும் ஹீந்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் சமிபத்தில் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரும் சாதனையை படைத்தது. இந்த திரைப்படத்தின் டீசர்காக தல ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் சிவா விருது விழா ஒன்றில் பத்து தினங்களில் டீசர் வெளியாகும் என்று கூறியிருந்தார்.
தற்போது விஸ்வாசம் படத்தின் டீசர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் சென்னாரில் யூ சான்றிதழ் பெற்றுள்ளதாக சென்னார் குழு கூறியிருந்தனர் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மிகவும் மாஸாக இருப்பணாகவும் கூறியுள்ளனர்.