அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஹீரோக்களுடன் இந்நாள் வரையில் பலர் பணியாற்றியுள்ளனர். அதில் சிலரின் முகங்கள் வெளியே தெரிவதில்லை.
அப்படியான ஒருவர் சிட்டிசன் மணி. 30 வருடங்களாக பணியாற்றி வரும் இவர் 100 க்கும் அதிகமான படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அஜித், விஜய் என பல ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது தன் முயற்சியால் திரைக்கதை, வசனம் எழுதி முதன் முறையாக படத்தை இயக்குகிறார்.
இதில் அறிமுக நடிகர் ஜெயம் ஹீரோவாக நடிக்க, மதுனிக்கா ஹீரோயினாக நடிக்கிறார். பெருநாளி என்ற இப்படத்தை ரோஹினி கிரியேஷன்ஸ் மார்கிரேட் அந்தோனி தயாரிக்கிறார்.