அஜித்தின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான விஸ்வாசம் படத்தில் அவருடன் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரும் நடித்திருந்தார். இதனால் நேற்று பிரபல திரையரங்கு ஒன்றில் கொண்டாடப்பட்ட விஸ்வாசம் 25வது நாளில் கலந்து கொண்டு மீண்டும் படத்தை பார்த்தார்.
பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரோபோ ஷங்கர், விஸ்வாசம் படத்தின் 25வது நாளை அஜித் ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்றார்.
அஜித்தை பற்றி எதாவது சொல்லுங்கள் என கேட்டதற்கு, தலயை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒருநாள் பத்தவே பத்தாது. ஒரு வாரம் முழுக்க பேச வேண்டும். ஏனென்றால் அஜித் மாதிரி ஒரு pure heart மனுஷனை இதுவரைக்கும் என் வாழ்க்கையில் நான் பார்த்ததே கிடையாது என பிரம்மிப்பாக கூறினார்.