அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா வீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் விஸ்வாசம். 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதைத்தொடர்ந்து அவ்வப்போது படப்பிடிப்பு புகைப்படங்கள், அஜித்தின் புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் லீக் ஆகி ட்ரெண்ட் ஆகின. விஸ்வாசம் மூலம் முதன்முதலாக அஜித்துக்கு இசையமைக்கிறார் இமான். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடலை வெளியிட்டு விருந்தளித்தது படக்குழு.