அஜித் என்றால் இன்று பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அவர் தனி நட்சத்திரமாக திகழ்கிறார். விளம்பரங்களை அவர் விரும்பாததால் சமூக வலைதளம் பக்கமே வருவதில்லை என்பது தான் உண்மை.
அவருக்கு ரசிகர் மன்றங்கள் இல்லாவிட்டாலும் அவருக்கென ஒரு தனி பெரும் கூட்டம் இருக்கின்றது. இதில் சினிமா பிரபலங்களும் அடக்கம். அவரின் குணங்களை நேரில் பார்த்தவர்கள் பலரும் சொன்னதுண்டு.
அண்மையில் அவர் தனது ரசிகர்கள் கட்சியில் இணைந்ததாக வந்த செய்தி கேட்டு அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்பதை அறிக்கை மூலம் கூறிவிட்டார்.
இந்நிலையில் எழுத்தாளரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதி மணி என்பவர் ஒரு ஜனநாயக நாட்டில் நடிகர்கள் உட்பட யாருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமையுண்டு.
நடிப்பைத்தாண்டி தனது சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்கு அனுக்கமாக இருப்பதற்காக மட்டுமே பல வருடங்களாக அரசியலை பயன்படுத்துபவர் மத்தியில் அஜீத்தின் தெளிவு மரியாதைக்குரியது. ‘தல’ எப்போதும் ஒரு தனிரகம் என கூறியுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் நடிகர்கள் உட்பட யாருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமையுண்டு.நடிப்பைத்தாண்டி தனது சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்கு அனுக்கமாக இருப்பதற்காகமட்டுமே பலவருடங்களாக ‘அரசியலை’ பயன்படுத்துபவர் மத்தியில் அஜீத்தின்தெளிவு மரியாதைக்குரியது.’தல’ எப்போதும் ஒரு தனிரகம்! pic.twitter.com/elmBnZy72Q
— Jothimani (@jothims) January 21, 2019