அஜித், வித்யாபாலன் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் 15 நாட்கள் அஜித்துடன் இணைந்து நடித்ததாகவும், அந்த அனுபவம் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாதது என்றும் அவர் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “’நேர்கொண்ட பார்வை’ ஒரு அற்புதமான படம். இப்படத்தின் கதை தற்போதைய சமுதாயத்திற்குத் தேவையான ஒன்று என்பதால் கட்டாயம் இந்த படத்தைப் பாருங்கள்.
அஜித்துடன் நடித்த காட்சிகள் குறித்து சொல்ல முடியாத நிலையில் இருந்தாலும் எல்லோரும் சொல்வது போல் அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் மிக ஆச்சரியத்தக்க வகையில் பழகுகிறார்.
உண்மையாக பழகும் நண்பர்களுக்கு உயிரையும் கொடுக்கும் அளவில் உள்ளார். அவருடன் 15 தினங்கள் அருகிலேயே இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம்” என்று ரங்கராஜ் பாண்டே கூறினார்.
#RangarajPandey Sir about #NerKondaPaarvai And Thala #Ajith
| #NKPTrialBegins pic.twitter.com/zI0USCWOt1
— Ajith Network (@AjithNetwork) March 17, 2019