நடிகர் அஜித் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். நடிப்பு, ரேஸிங், ஏரோடயனமிக்ஸ், துப்பாக்கி சுடுதல் என தனக்கு பிடித்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் அவர். அரசியல் உட்பட பொது விஷயங்களில் எப்போதும் அவர் ஆர்வம் காட்டியதில்லை.
இந்நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி ஒரு பேட்டியில் பேசும்போது அஜித் அரசியலுக்கு வந்தால் நாடு ஏற்கும் என கூறியுள்ளார்.
“அஜித் அருமையான நல்ல மனிதர், பந்தா இல்லாதவர், ஒரு இடத்திற்கு சென்றால் யாருக்கும் இடைஞ்சல் இருக்க கூடாது என நினைப்பவர், அப்படி பட்டவரை நாடு ஏற்றுக்கொள்ளும்” என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அவர் பேசியுள்ள வீடியோ இதோ..
அஜித்த எல்லா தரப்பு மக்களுக்கும் புடிக்கும். அவர் நல்ல, எளிமையான மனிதர். அவர் அரசியலுக்கு வந்தா நாடு ஏற்றுக் கொள்ளும்.
– அமைச்சர் ராஜேந்திர பாலாஜி pic.twitter.com/D9c0T8swdL
— Trollywood ⱽ⁵ (@TrollywoodV5) September 6, 2019