அஜித் அமைதியாக தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். அவர் உதவி செய்வது கூட வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என நினைப்பார் என்பார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
அண்மையில் அவரின் ரசிகர்கள் என்ற பெயரில் சில BJP ல் இணைந்தது பெரும் சர்ச்சையானது. பின்னர் அஜித்தும் தனக்கு அரசியலில் ஆர்வமில்லை என கூறி தன் ரசிகர்களை நல்ல விதமாக அறிக்கை மூலம் எடுத்துரைத்தார்.
இது தொலைக்காட்சிகளில் பெரும் விவாதப்பொருளானது. இந்நிலையில் இயக்குனர் கரு.பழனியப்பன் அஜித் அளித்த அறிக்கை மூலம் அவரது பெருமை பன்மடங்கு உயர்ந்துவிட்டது என நேர்காணலில் கூறியுள்ளார்.