அஜித்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் அதிகமாகிக்கொண்டிருக்கின்றது. சமூகவலைதளங்களில் அது தெரியாவிட்டாலும், படங்களின் போது மாஸ் காட்டிவிடுகிறார்கள்.
அண்மையில் இதை நிரூபணம் செய்துவிட்டார்கள். பல நல்ல விசயங்களை செய்து வரும் அவர்கள் தற்போது பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் நூலகத்தை அமைத்துள்ளனர்.
இந்த நூலகத்தை மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பேரன் சலீம் திறந்து வைத்தார். இனி வரும் காலங்களில் கூடுதல் புத்தகங்களுடன் இந்த நூலகம் பெரிதாக இயங்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.
நல்லெண்ணத்துடன் நூலகத்தை திறந்துள்ள அஜித் நசிகர்களின் இச்செயல் அப்பகுதி மக்களிடம் பாராட்டை அதிக பெற்றுள்ளது.