பேட்டையா விஸ்வாசமா எது திரைக்கு வரப்போகிறது!
ரஜினி நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் பேட்ட அதேபோல் அஜித் நடிப்பிலும் வெளிவர உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கலுக்கு மோத உள்ளன. இவரது ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பேட்ட. இப்படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா மற்றும் விஜய்சேதுபதி ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது தற்போது சிங்கிள் ட்ராக் ரிலீசாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு திரைப்படத்தின் தயாரிப்பாளர்களும் வரும் பொங்கலுக்கு மோத உள்ளன இப்படி இருக்கும் நிலையில் யாராவது ஒரு படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என இரண்டு தயாரிப்பாளர்களும் முடிவெடுத்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் அஜித் படம் ரஜினி படத்தின் அறிவிப்பிற்கு முன்னரே விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் யாருக்கு திரையரங்கு கிடைக்கப் போவது என காத்திருக்கின்றனர்.
இந்த இரு படங்களும் தள்ளித்தள்ளி ரிலீஸ் தேதி அறிவித்தாலும் தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. விசுவாசத்தை உறுதிசெய்யும் அப்படக்குழுவினர் ஆங்காங்கே பிரம்மாண்டமான பேனர்களை வைத்து இப்போது விளம்பரம் செய்து வருகின்றனர். ஆகையால் விசுவாசம் படம் தள்ளிப் போக எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்பதை அப்படக்குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
அதிகம் படித்தவை:ரஜினியின் பேட்ட படத்தில் இணைந்த விஜய்யின் தெறி பட நடிகர்.!