அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான வேலைகள் எல்லாம் வேகமாக நடந்து வருகிறது.
ஒருபக்கம் புரொமோஷன் மாஸாக நடக்கிறது, அவ்வப்போது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பட தகவல்களாக வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கைப்பற்ற இப்படத்திற்காக கம்பெனிகள் இடையே கடும் போட்டி நடக்கிறதாம். தற்போது முன்னணியில் ரெட் ஜெயன்ட் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது.