விஜய் நடிப்பில் உருவாகிவரும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பெண்ணே பாடல் வரி வீடியோ 86 மணி நேரத்தில் 7 இலட்சம் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் அஜித் நடிப்பில் வெளியாகிய விஸ்வாசம் திரைப்படத்தின் அடிச்சு தூக்கு பாடலின் சாதனையை இந்த பாடல் முறியடித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை பாடலாசிரியரான விவேக் எழுதியுள்ளார்.
இந்த பாடல் கடந்த 23ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.