நடிகர் அஜிதின் ‘AK60’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் போனி கபூர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்துப் பேசியதாகவும், இதனால் ‘AK60’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
ஆனால் படக்குழு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ வரும் ஒகஸ்ட் 8ம் திகதி வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்து தயாரிக்கப் போகும் ‘AK60’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை போனி கபூர் வெளியிட்டுள்ளார். ஒகஸ்ட் மாத இறுதியில் ‘AK60’ திரைப்படத்தின் படத்திற்கான பூஜை போடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இத்திரைப்படத்தையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.